Breaking
Sun. Dec 22nd, 2024

Dr. Mifraaz shaheed (MBBS)

மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.

أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
(75: 3-4)

இதே விரல் ரேகை மாறாமல் நாளை மறுமையில் எழுப்புவேன் என்று அல்லாஹ் விரல் நுனியை சிலாகித்துகூறுவதன் மூலம், உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கின்றார்களோ அத்தனை கோடி பேருக்கும் வெவ்வேறுபட்ட கை விரல் ரேகை இருக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்த்துகின்றான்.

மேற்கூறிய வசனமே பிற்காலத்தில் விரல் ரேகை அடையாளத்தின் மூலம் எந்த மனிதனையும் வேறுபடுத்தி அறியலாம் என்ற தொழில்நுட்பம் உருவாகும் என்ற செய்தியை குறிப்புணர்த்தி நின்றது.

இரட்டை குழந்தைகளை பொருத்தவரைக்கும் இந்த வசனம் சரிதானா என்று மருத்துவ ரீதியில் நோக்கினால் இரட்டை குழந்தைகளை மருத்துவ ரீதியில் இரண்டு வகையாக பிரித்துப் பார்க்கலாம்.

முதலாவது வகை dizygotic twins -அதாவது இரண்டு முட்டை கலங்கள் இரண்டு விந்தனுக்களுடன் கருக்கட்டி வளரக்கூடிய இரட்டை குழந்தைகள். இவை இயல்பொத்திருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. எனவே மேற்கூறிய வசனத்துடன் எந்த வகையிலும் முரண்படவில்லை.

ஆனால் இரண்டாவது வகை monozygotic twins -அதாவது ஒரு முட்டை கலம் ஒரு விந்தணுவுடன் கருக்கட்டி இரண்டாக பிரிந்து வளரக்கூடிய இரட்டை குழந்தைகள். இவை அனைத்து இயல்பிலும் இயல்பொத்து ஒரே பால் ஒரே குணாதிசயங்கள் ஒரே உருவமைப்பு கொண்டதாக காணப்படும்.

மருத்துவ ரீதியில் எந்த ஒரு வேறுபாட்டையும் காண முடியாது. DNA பரிசோதனையின் மூலம் கூட பிரித்தறிய முடியாது. ஆனாலும் கூட, விரல் நுனியின் ரேகையை மட்டும் அல்லாஹ் வேறுபடுத்தி வைத்துள்ளான்.

இரட்டை குழந்தைகள் விடயத்தில் கூட மேற்கூறிய வசனத்தை பொய்ப்பிக்க முடியாத படி,அல்லாஹ் மனிதனை படைத்து அவனே முற்றிலும் அறிந்தவன் என்று நிரூபித்திருக்கின்றான்.

الله اکبر
அல்லாஹ்வே மிகப்பெரியவன்.


Related Post