Breaking
Sat. Mar 15th, 2025

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், கண், கர்ப்பகால மருத்துவ சோதனை உள்ளிட்ட பல சேவைகள்) வழங்கப்படவுள்ளன.

இதன்பிரகாரம், அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் மேற்படி விடயம் சம்பந்தமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

விருசர அட்டை பயனாளிகள் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் பயன்களை அரச மற்றும் தனியார் துறைகளில் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post