இந்திய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் திருமணத்தில் ரசம் இல்லாததால் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் – சௌபாக்கியம்மா தம்பதிகளின் மகள் சௌமியா. இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்றுமுன்தினம் திருமணம் நடப்பதாக முடிவானது.
திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து இடம்பெற்றுள்ளது. மணமகன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிக தாமதமாக மண்டபத்துக்கு வந்துள்ளதையடுத்து உடனே அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது அவர்கள் சாப்பாட்டில் ரசம் போதாது என கேட்டுள்ளனர். ரசம் முடிந்து விட்டதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
உடனே மணமகன் குடும்பத்தினர் ஆவேசமடைந்து பெண் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளனர். பெண்வீட்டார் எவ்வளவோ கூறி சமரசம் செய்துள்ளனர்.
ஆனால், மணமகன் வீட்டார் சமாதானமடையாமல் மண்டபத்தில் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைப்பதற்காக அவர்களது அறைக்கு சென்றபோது அங்கு மணமகனை காணவில்லை.
தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இரவோடு இரவாக மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனால் திருமணம் நின்றுள்ளது. இதனையடுத்து சௌமியாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் இடம் பெற்றுள்ளது.
ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது பெண் வீட்டார் முறைப்பாடு செய்துள்ளனர்.
– See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=14581#sthash.t7VsL01a.dpuf