Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றும் ஜனா­தி­பதி சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­காவின் நியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூயோர்க் பௌத்த விஹா­ரையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த நிகழ்­வுக்கு நியூயோர்க்கில் வசிக்கும் இலங்­கை­யர்கள்வருகை தந்­தி­ருந்­தனர். இதன்­போது அமெ­ரிக்க வாழ் இலங்­கை­யர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுமு­க­மான கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ஈடு­பட்டார்.

நிகழ்வில் ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நாட்­டுக்கு எதிர்­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம் ஜன­நா­யகம் மனித உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும்.

மேலும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சர்­வ­தே­சத்­திடம் இருந்து பாரிய ஆத­ரவு கிடைத்­துள்­ளது. மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் புதன்­கி­ழமை இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் உரை­யாற்­ற­வுள்ளார். கடந்த சனிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்தை சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­த­தி­லி­ருந்து நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று கூற­ப­பட்டு வந்த நிலையில் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்த விட­யத்தை உறு­தி­ப­டுத்­தி­யுள்ளார்.

அண்­மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.

Related Post