Breaking
Wed. Jan 8th, 2025

தி. ரஹ்மத்துல்லா

சவூதி அரேபியா மதினா நகரில் கட்டப்பட்டு வரும் புதிய சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இந்த விமான நிலையம் சோதனை இயக்கம் செய்யப் பட இருக்கிறது. வெற்றிகரமான சோதனை இயக்கத்திற்குப் பின், இந்த விமான நிலையம் விரைவில் திறக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

இந்த விமான நிலையத்தில் 16 புறப்பாடு வாயில்கள் 32 பாலங்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. 64 போர்டிங் கவுண்டர்களும், 24செல்ப் சர்வீஸ் கவுண்டர்களும் அமைக்கப் பட்டுள்ளன. ஹஜ் சமயத்தில் மேலும் 16 செல்ப் சர்வீஸ் கவுண்டர்கள் நியமிக்கப் படும்.

200 பஸ்கள், 1500 கார்கள் நிறுத்துமிடமும், 200வாடகை டாக்ஸிகள் நிலையமும் அமைக்கப் பட்டுள்ளன.

வருடத்திற்கு 80 லட்சம் பயணிகள் பயணடைவர்.

Related Post