Breaking
Mon. Dec 23rd, 2024

நீங்கள் படத்தில் பார்ப்பது சுவிடனின் அஸ்கெலெஸ்றோனா நகரில் அமைந்துள்ள இறை இல்லமாகும்.

சுவீடனீல் முதல் முதலாக எழுப்ப பட்ட இறை இல்லமும் இதுவாகும்.

இந்த இறை இல்லத்தில் தொழுகை நடப்பது போல் அங்கு இஸ்லாமிய ஆய்வு மையமும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு திருமறையை போதிக்கும் போதனை கூடமும் அமைந்திருக்கிறது

இந்த பள்ளி வாசலின் பல் வேறு புனரமைப்பு பணிகளுக்காக வங்கிகளில் கடன் பெற பட்டிருந்தது

அந்த கடன் உரிய காலத்தில் செலுத்த படாததால் குறிப்பிட்ட வங்கி அந்த இறைஇல்லத்தை பறிமுதல் செய்து ஏலமிடபோவதாக அறிவித்தது
.
இந்த நிலையில் இஸ்லாத்தில் இணைந்து குறிப்பிட்ட அந்த .இடத்தை இறையில்லம் அமைப்பதர்காக தானம் செய்த சுவீடனை சார்ந்த சகோதரர் உலக முஸ்லிம் சமூகத்திர்கு ஒரு அவசர வேண்டு கோளை முன் வைத்தார்

விர்பனைக்கு வரும் இறை இல்லத்தை உங்கள் கொடை உள்ளத்தின் மூலம் மாற்றுங்கள் அந்த இடத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பணிகள் நடை பெற துணை நில்லுங்கள் என்று அவர் வேண்டு கோள் வைத்திருந்தார்

இந்த வேண்டு கோளை படித்த சவுதியை சார்ந்த குறிப்பிட்ட ஒரு நபர் தொண்டு நிறுவனத்தின் துணையோடு குறிப்பிட்ட இறை இல்லத்தின் நிர்வாகிகளை தொடர்ப்பு கொண்டு அந்த இறை இல்லத்தின் பெயரில் இருந்த அனைத்து கடன்களை அடைத்து விட்டார்

சுமார் 5 மில்லியன் சுவீடன் பணத்தை இந்த பணிக்காக அவர் வாரி வழங்கி விர்பனைக்கு வரவிருந்த இறை இல்லத்தை இறையருளால் காப்பாற்றினார்

இவ்வளவு பெரிய தொகையை அவர் செலவு செய்தும் தன்னை பற்றிய விபரங்கள் பகிரங்க படுத்த படுவதை விரும்பவில்லை இது எனது இறைவனுக்காகவும் எனது மறுமைக்காகவும் செய்த பணியாகும் என கூறி விளம்பர வெளிச்சத்தில் இருந்து தன்னை மறைத்து கொண்டு விட்டார்

ஒரு இறை இல்லத்தை காப்பாற்றிய அந்த நல்லமனிதருக்கு இறைவன் தனது அருளை பொழிவானாக

Related Post