Breaking
Mon. Dec 23rd, 2024

வரு­டப்­பி­றப்பு காலங்­களில் பொருட்களின் விலை அதி­க­ரித்து விற்­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கை­யில்,

நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறு­வ­ன­மாக பேசப்­பட்ட நிறு­வ­னத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்­ததன் பின்னர் குறு­கிய காலத்தில் அதனை லாப­மீட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்ளோம்.

சதொச நிறு­வ­னத்தின் தலைவர் உட்­பட அமைச்சின் செய­லா­ளர்கள் சதோச நிறு­வ­னத்தின் அதி­கா­ரி­களின் பூரண ஒத்­து­ழைப்­போடு இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

அது மாத்­தி­ர­மின்றி அரசாங்­கத்தின் நிதி­யின்றி முழு­மை­யாக இந் நிறு­வ­னத்தின் இலா­பத்­தி­லேயே இங்கு பணி­யாற்றும் 4000க்கு மேற்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு சம்­பளம் வழங்கும் அள­விற்கு இன்று முன்­னே­றி­யுள்­ளது.

12 வரு­ட­ங்­க­ளு­க்கு பின்னர் சதோச மொத்த விற்­பனை நிலை­ய­மொன்­றினை வவு­னி­யாவில் திறந்து வைத்­துள்­ளமை சிறந்த விட­ய­மாகும். இத­­னூ­டாக இந்த மாகா­ணத்தில் வாழும் மக்கள் சிறிய கடை வியா­பா­ரி­க­ளுக்கு மலிந்த விலையில் மொத்­த­மாக பொருட்­களை கொள்­வ­னவு செய்­து­­கொள்ள முடியும்.

இந் நிலையில் இந்த தமி­ழ் – சிங்­கள புது­வ­ருட தினத்தில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­க­ளை­­ அதி­க­ரித்து விற்­ப­தாக எமக்கு முறைப்­பாடு கிடைக்கப் பெற்­றுள்­ளது.

இந் நிலையில் நான் வியா­ப­ா­ரி­க­ளுக்கு வேண்­டு­கோ­ளாக கேட்­கின்றேன். தயவு செய்து உரிய விலைக்கு மேல் அதி­க­­ரிக்­கா­தீர்கள்.

அத்­துடன் பாவ­னைக்கு உகந்த பொருட்­களை விற்­பனை செய்­யுங்கள். அவ்­வாறு இடம்­பெ­றாது விட்டால் அந்த வியா­பார நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன் என்­றார்.

By

Related Post