Breaking
Mon. Nov 18th, 2024

-பாறுக் ஷிஹான்

வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.

வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார்.

மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வசித்த முஸ்லீம் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

அவ்வாறு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள மரிச்சிக்கட்டி , கரதிக்குழி , பாலாங்குழி , கொண்டச்சி , மற்றும் விளாத்திக்குளம் ஆகிய ஆறு கிராமங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனவும் அது சட்ட ரீதியாகவே நடைபெறுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தெற்கில் உள்ள சில இனவாதிகள் , மதவாதிகள் , மற்றும் சுற்றாடல் அமைப்புக்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றார்கள் எனவும் அதனை இந்த சபை கண்டிக்கின்றது எனவும் அவர்  தெரிவித்தார்.

By

Related Post