Breaking
Thu. Jan 9th, 2025

வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என இந்த பிக்குமார் கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச 1980 ஆம் ஆண்டு மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் திறந்து வைத்த வீடமைப்புத் திட்டத்தின் பழைய வீடுகள் சிலவற்றையும் பிக்குமார் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளனர்.

வில்பத்து வனத்தை அழித்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமையில் வெளியிடங்களில் இருந்து முஸ்லிம் மக்களை அழைத்து வந்து மீள்குடியேற்றவதாக நாட்டில் பாரிய பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரசாரங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் இந்த பிரதேசத்திற்கு வந்து என்ன நடந்துள்ளது என்பதை சரியாக தேடிப்பார்பதில்லை.

இந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மை. மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

பாரம்பரியமாக உரிமையுள்ள காணிகளிலேயே இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.30 வருடங்களுக்கு பின்னர் இந்த மக்கள் தமது இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்த வீடுகள் அழிந்து போயுள்ளன. வீடுகளில் பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன. காணிகள் சிலந்தி வலைப்போல் மூடப்பட்டுள்ளன.

இந்த மரங்களையும் காடுகளையும் அழித்து துப்பரவு செய்யும் போது நாட்டிற்குள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பிரதேசத்திற்கு சென்று பார்த்த போதுதான் உண்மை எமக்கு புரிந்தது.இந்த பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் உள்ளனர். தமிழ் மக்களும் இருக்கின்றனர்.

இதனால், போருக்கு பின்னர் கடினமாக முறையில் கட்டியெழுப்பட்டுள்ள நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் சீர்குலைக்கும் வகையில் இனவாத நோக்குடன் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

அப்படியில்லை என்றால், நாட்டில் மீண்டும் ஒரு இனவாத போர் ஏற்படக் கூடும். அந்த யுத்தம் நடந்த ஆயுத யுத்தத்தை விட கொடூரமான யுத்தமாக மாறும். இது குறித்து ஆட்சியாளர்கள் என்ற வகையில் புத்திசாதூர்யமாக சிந்தித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது என பிக்குமார் கூறியுள்ளனர்.

வவுனியா அவரந்துலாவ செத்திகிரிய விகாராதிபதி மொரகொட தம்மானந்த தேரர், முல்லைதீவு பௌத்த பாதுகாப்பு சபையின் தலைவர் கிரிஹிப்பேவெவ விகாரதிபதி பொலன்நறுவே திலக்கலங்கார தேரர், ஹெத்தாவெட்டுனுவெவ விகாரதிபதி மொனரவெவே தம்மிக்க தேரர் உட்பட பிக்குமார் மேற்படி கிராமங்களுக்கு விஜயம் செய்து உண்மையான நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

By

Related Post