அஸ்ரப் ஏ சமத்
வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு.
எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள், பௌத்த அமைப்புக்கள் வில்பத்து காட்டில் முஸ்லீம்கள் குடியேறியுள்ளனர். எனத் தெரிவிப்பதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்கொன்ரை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து 85க்கும் மேற்பட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களின் ஊடகாவியலாளர்கள் குழுவொன்று மன்னாh,; மறிச்சுக்கட்டி, முசலி வில்பத்து பிரதேசங்களுக்கு நேற்றுக் காலை சென்றனர். அங்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமும்;, அப்பிரதேச குடிவாசிகள் ; வில்பத்து வனாந்திர பிரதேசத்தில் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் குடிபெயர்ந்துள்ளனரான ? என நேரடியாக கண்கானித்தனர்.
ஊடக மாநாடு மறிச்சுக் கட்டி பள்ளிவசாலில் நடைபெற்றது. இங்கு இப்பிரதேச வாசிகள் முஸ்லீம்களுக்கு எதிராக சில ஊடகங்கள், இனவாத பௌத்த அமைப்புக்கள் எதிரானதொரு ஆர்ப்பாட்டமும் அங்கு இடம்பெற்றது.
இங்கு ஊடகவியலாளர்கள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் வில்பத்து வனப்பிரதேசங்களில் முஸ்லீம்கள் குடிபெயர்ந்துள்ளனரா? பல்வேறு கேள்விகளைக் கேட்டு வாதத்திலும் ஈடுபட்டனர்.
அங்கு வில்பத்து வனவள பலகைகக்கு அப்பால் அங்கு முஸ்லீம்கள் குடிபெயரவில்லை. அங்கு 1970 ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட பள்ளிவசால்கள், குடிநீர் கிணருகள், கைவிடப்பட்ட வீடுகள் வில்பத்துக்குப்பால் 2 கிலோமீட்டருக்கே தாம் விடுதலைப்புலிகள் விரட்ட முன்பு இருந்த இடத்தில் சில குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.
அதற்காக அவர்களுக்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வனவள திணை;க்கள அதிகாரிகள், காணி, அதிகாரிகள் ஜனாதிபதி விசேடகுழுக்கள் கொண்டவர்களின் அனுமதியுடன் முறையாக ஒரு யாசீன் சிட்டி எனும் வீடமைப்புத்திட்டமே அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அக் குடியிருப்புக்கும் இந்த வில்பத்து வணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
25 வருடங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு குடும்பம் தற்பொழுது 4, 5 குடும்பங்களாக பெருகியுள்ளது. இந்த மக்கள் 80ஆயிரம் குடும்பங்களாக பெருகியுள்ளனர். இ;ம் மக்கள் புத்தளத்தில் இருந்து மீள இந்தப்ப பிரதேசத்திற்கு தமது சொந்த இடங்களில் குடிபெயர தயாராக உள்ளனர். இதுவரை அரசாங்கமோ, சம்பந்தப்பட்ட அமைச்சோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
கடந்த 6 மாத காலத்pற்குள் மறிச்சுக்கட்டு பகுதிகளில் யானைகள் மாறும் இடம் என்ற பெயர்பலகையை வைத்து அதற்குள் முஸ்லீம்கள் குடிபெயர்ந்துள்ளனர் என திட்டமிட்டு சில ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.
இதே நேரம் இங்கு ஒர் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.