Breaking
Sun. Nov 24th, 2024
மன்னார்  மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மரிச்சிகட்டி,பாலைகுழி மற்றும் கரடிக்குழி மக்கள் கடந்த முன்று வாரகாலமாக பல்வேறு இனவாத குழுக்களினால்  சிறமங்களை எதிர் நோக்கி வருகின்றார்.
குறிப்பாக இந்த நாட்டில் மிகவும் விமர்சத்திற்கு உள்ளான வில்பத்து மீள்குடியேற்ற பிரச்சினைகள் என்ற விடயத்தினை கையாளும் நோக்குடன் மேல் குறிப்பிட்ட முன்று கிராமங்களையும் ஒன்றாக சேர்த்து விசேட கலந்துரையாடல் ஜீம்மா தொழுகையின் பின்பு  மரிச்சிகட்டி சமுக சேவையாளர் மஹ்முத் தௌபீக் மௌலவின் தலைமையில் ஜாசிம் பாடசாலையில் மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் அல்-ஜாசிம் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்காக சம்மேளனம் ஒன்றை முன்று கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கினார்கள்.
இந்த சம்மேளத்தின் பிரதான நோக்கம் வில்பத்து பகுதியினை அண்டி வாழ்கின்ற மக்கள் கடந்த காலங்களில் எதிர் நோக்கிய பிரச்சினைகள் .தற்போதைய நிலையில் எங்கள் கிராமங்களுக்கு உள்ளே சில இனவாதம் கொள்கை கொண்ட பௌத்த மதவாதிகள் அத்து மீரி உள்ளே வருதல்  இன்னும் நாங்கள் வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறவில்லை என்ற பல்வேறு பிரச்சினைகளை மக்கள் மையபடுத்தும் பிரதான பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக இயங்கும் என சம்மேளத்தின் உறுப்பினர்கள் தெவித்தார்கள்.
இன்னும் எதிர்வரும் வெள்ளி கிழமை மக்களை ஓன்று திரட்டி எங்கள் தாய புமில் எங்களை மிள்குடியேற்று  என்ற தொனியில் ஆர்பாட்டம் ஒன்றை நாடத்த வேண்டும் மக்கள் கோரிக்கை முன்வைத்தார்கள் என திர்மானம் எடுக்கபட்டது.

Related Post