Breaking
Fri. Jan 10th, 2025

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வில்பத்து வனப்பகுதியை அண்டிய குடியிருப்புகள் தொடர்பாக நேரில் கண்டறியச் சென்ற ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அங்கு அவ்வாறு எதுவிதமான சட்டவிரோதமான குடியேற்றமும் இல்லையென தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த.

24 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்களுக்கே அங்கு மீள் குடியேறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தம்மிடம் நேரில் தெரிவித்ததாகவும் லால் காந்த மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்த ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலதிக விளக்கங்களையும் வழங்கி குறிப்பிட்ட பிரதேசங்களை நேரில் பார்வையிட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post