Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள வில்பத்து விவகாரத்தால் ஏற்படவுள்ள பின்விளைவுகளை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய 21 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைத்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடையம் தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாகவும், பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் அமைச்சர்களான,பெளசி , ஹிஸ்புல்லாஹ், ஹலீம், றிசாத் உட்பட பிரதியமைச்சர் அமீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான்,நவவி, அப்துல்லா மஹ்ரூப், கலந்துகொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில், தேசிய ஷூரா சபை, ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மன்னார் முசலி பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post