ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையல்ல. இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வு கண்டு அந்த மக்களுக்கு விமோசனம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, எம்.டி. கே குணவர்தன உட்படலான மேலும் சிலர் இடம்பெறுகின்றனர்.