வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரித்தான காணிகளிலே அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகும் பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
2002 ஆம் வருடம் நான் பெருந்தோட்ட அமைச்சராக இருந்த போது வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லீம்களை புத்தளத்தில் குடியேற்ற சுமார் 15 ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்தேன் அப்போது அமைச்சர் ரிசாத் ஊடக அகதிகளான முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தை நேரடியாக அனுபவித்த அந்த மக்களை மேலும் மேலும் இண்னல்களுக்கு உள்ளாக்குவதைவை அணுமதிக்க முடியாது எனவும் வில்பத்து விவகாரம் அரசியல் பழிவாங்கும் செயலேயன்றி வேறு ஒன்றும் இல்லை என்று குறிப்பட்ட அமைச்சர் இதனூடாக இன நல்லுரவை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வதாக குறிப்பிட்டார்.
எமது அரசாங்கம் வடபுல மக்கிளின் மீள் குடியேற்றத்துக்கு பூரண ஒத்தழைப்பை நல்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.