Breaking
Mon. Dec 23rd, 2024

மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் அறிவிப்பு அதனை மேலும் வழுவூட்டும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் சிங்கள பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள நிலவரங்களை தெளிவுபடுத்துவதின் முக்கியத்துவத்தை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் அமைச்சர் ரிஷாதிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை அவருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By

Related Post