வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ எச் எம் பௌசி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனைக் கூட்டத்தில் பேசிய பலர் வில்பத்துப் பிரதேச பிரகடனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டினை விமர்சித்துப் பேசியதனை தொலைக்கட்சியில் கண்ணுற்றேன். “இது நல்லதல்ல”எனவும் பௌசி ஹக்கீமிடம் சுட்டிக்காட்டினார்.
“நான் அவ்வாறு பேசவில்லை” என்று அமைச்சர் ஹக்கீம் பௌசியிடம் தெரிவித்த போது உங்களைப்போன்று மற்றவர்களும் இந்த விடயத்தில் ரிஷாட்டை விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
- நன்றி நவமணி, விடிவெள்ளி (05.04.2017)