அஸ்ரப் ஏ சமத்
வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை மீளக் குடியேற்ற வேண்டும் என்று மேல், கிழக்கு மத்திய மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இணக்கம்
வடக்கு முஸ்லீம்களை மீள் குடியேற்றும் விடயத்தில் நேற்று (04) இரவு அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில் அனைத்து கட்சிகளின் முஸ்லீம் பிரநிதிகள் கூட்டமொன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கம் வகிக்கும் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வடக்கு முஸ்லீம்கள் மீளக் குடியமர்த்தல் ;அவர்களது வில்பத்து விடயங்கள் பற்றி பல முடிவுகளும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக – பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசீம், எம். எஸ். அஸ்லம், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சத், கிழக்கு மாகாண சபை உறுப்பிணர் ஜெமீல் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அனர்த்த நிவாரண அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொன்டனர்.
ஜ.தே.கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், மேல் மாகணசபை பைருஸ் ஹாஜி, மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ;இரு முஸ்லீம் உறுப்பினர்கள், பேருவளை நகர சபைத் தலைவர் மசாஹிம், எஸ்.எஸ்.பி மஜீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யூ.எல்.எம் பாருக், திருமலை மஹ்ருப் ஆகியோர்களும் உட்பட பல்வேறு முன்னாள் உள்ளுராட்சி சபைகளது உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நுஆக் கட்சியின் தலைவரும் மத்திய மாகணசபை உறுப்பினர் -அசாத் சாலி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுகையிர் ஆகியோறும் கலந்து கொண்டனர்
மற்றும் நல்லாட்சிக்கான கட்சி மாகாண சபை உறுப்பினர் மற்றும் அகில இலங்கை மக்கள் கட்சியின் பிரதியமைச்சர் அமீர், அலி செயலாளர் வை.எல். எஸ் ஹமீட் மற்றும் ;இளம் சட்டத்;தரணிகள் கொண்ட ஆர்,ஆர். அமைப்பின் சட்டத்தரனி சிறாஸ் நூர்த்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டு இங்கு கருத்துக்களை தெரிவித்தனர்.
இக் கூட்டத்தின் போது – வடக்கு முஸ்லீம்களை மீளக் குடியேற்றல் சம்பந்தமாக முஸ்லீம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஒரு தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். இவ்விடயம் தனியே அமைச்சர் றிசாத்தின் தனிப்பட்ட விடயம் அல்ல. இது இந்த நாட்டில் வாழும் நமது சகோதரர்களின் வாழ்வாதார மற்றும் சமுகப் பிரச்சினைம் ஆகும். ;அத்துடன் கிழக்கில் இது சம்பந்தமாக இளைஞர்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும்’ ஜெமீல் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் – பைசர் முஸ்தபா இந்த விடயத்தினை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் மட்டும் செயல்படாமல் சகல முஸ்லீம் பாராளுமன்ற உறுபப்pனர்கள் ஒன்று கூடி கடந்த காலத்தில் சகல முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இயங்கியது போன்று இவ் விடயத்திலும் ஒரு தீர்மானம் எடுத்தல் வேண்டும். இவ் விடயத்தினை ஜனாதிபதி மற்றும் பௌத்த சமுகங்களுக்கும் இதனை சரியான முறையில் தெளிவுபடுத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பாரளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் – உரையாற்றுகையில் – வில்பத்து மறிச்சிகட்டு என்னும் பூமியில் 18 நூற்றாண்டில் இருந்து முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடம.; அதற்கான சகல தஸ்தாவேஜூகளும் என்னிடம் உள்ளது. ஆனால் இங்;கு காண்பிக்கப்ட்ட பவர் பொயிண்ட் காட்சி விடயத்தில் என்னையும் ;இவர்கள் கலந்து ஆலோசித்திருத்தல் வேண்டும்.
அமைச்சர் றிசாத் மட்டும் தனித்து இயங்குகின்றார். இப்பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவனாக கடந்த 6 வருடங்களாக செயல்பட்டவன் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூட அமைசசர் றிசாத் பதியுத்தீன் இணைப்பாள்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அவரது இணைப்பாளர்களே இங்கு பேசுவதற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி கூட்டத்தில் ;இருந்து வெளியேறினார்.
பைருஸ் ஹாஜி – மேல் மாகணத்தில் எதிர்வரும் கூட்டத் தொடரில் வில்பத்து மற்றம் வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியேற்றல் சம்பந்தாக ஒரு தீர்மாணம் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். இன்று இங்கு வந்துபோது தான் இந்த மன்னார் மக்களது பிரச்சினைகள் எனக்கு தெளிவாக தெறிந்தது. இவ்விடயத்தில் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவை வெளிச்சத்துக்கு வராமால் முடி மறைக்கபப்பட்டடுள்ளது. நான் அமைச்சரையே தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இதனையே எமது சிங்கள சகோதரர்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.
மத்திய மாகாணத்தில் உள்ள இரு முஸ்லீம் உறுப்பனர்கள் ;இணைந்து மத்திய மாகாணத்திலும் ஒரு தீர்மாணம் நிறைவேற்றி அதனை பிரதமர், ஜனாதிபதிக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.
அத்துடன் 2 இலட்சம் பேர்களது கையெழுத்து வேட்டை நடாத்தி அதனை மறிச்சிக்கட்டியில் இருந்து ஆரம்பித்து அதனை அரசுக்கும் ஏனையோறுக்கும் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்தல் வேண்டும். எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லீம்களது விடயங்கள் பவர் பொயின்ட் ஊடக காட்டப்பட்ட விடயங்கள் சிங்கள ஊடகங்களிளும் ;தெளிவுபடுத்தினால் ;சிங்கள மக்கள் இதனை நன்கு தெளிவுபெற்று இதனை ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு இவ் விடயம் தெரியாமல் பிழையாக காட்டப்பட்டு வருகின்றது. எனவும் பேருவளை அம்ஜத் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத், ஏ.எச்.எம் அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோறும் இங்கு கருத்து தெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் ஞயிற்றுக் கிழமை மறிச்சுக்கட்டி வில்பத்து போன்ற பிரதேசங்களுக்கு இங்கு வருகை தந்தவர்கள் செல்வது எனவும் தீர்மாணம் எடுக்கப்பட்டது.
இறுதியாக அமைச்சர் றிசாத் பதியுத்தீனும் தமது நிலைமை அங்குள்ள மக்கள் படும் கஷ்டம் தற்போதைய அங்குள்ள மக்கள் தமது வாழ்வாதாரங்களுக்காக படும் கஷ்டங்கள் அங்கு எந்தவித கட்டுமானமோ குடியேறறம் சகலதும் ;இந்த அரசினால் இடை நிறுத்தி வைக்கபட்டுள்ள விடயங்கள் பற்றியும் ;தொட்டு உரை நிகழ்த்தினார்.