Breaking
Fri. Jan 10th, 2025
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விட விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் என குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் சர்ச்சைகளை கருத்துகளை தெரிவித்து வரும் டிரம்ப், ஒபாமாவைவிட புடின் மேலானவர் என தெரிவித்துள்ளார்.
மூத்த ராணுவ பிரிவினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் இடையேயான உறவில் பிரச்சனைகள் இருக்காது என்றும், ரஷ்யாவுடன் மிகமிக நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

By

Related Post