Breaking
Fri. Nov 29th, 2024

லக்ஷ்மி பரசுராமன்
விளையாட்டில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரம் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் விளையாட்டுப் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்குவரெனவும் அவர் கூறினார்.

அம்பலந்தோட்டை போலான மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டிருந்த வேளை, திடீரென மயங்கி மரணமுற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இந்தக் குழு நியமனம் தொடர்பில் கூறினார்.

குறித்த மாணவன் மரதன் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக வைத்திய சான்றிதழ் ஒன்றை பெற்றிருந்தார்.

மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடவேண்டியது கட்டாயம். ஆகை யால், நியமிக்கப்படும் குழு அது தொடர்பில் ஆராயுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, மரதன் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவனொருவன் உயிரிழந்தமையை தொடர்ந்தே விளை யாட்டுத்துறையில் ஈடுபடும் மாணவர் களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டது.

இந்நிலையில், இரத்தினபுரியில் மரதன் ஓடிய மேலுமொரு மாணவி உயிரி ழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post