மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை இன்று மன்னார் நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கி வவைக்கப்பட்டது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் , விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமயிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறித்த உதவித் தொகை மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் 170 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.