ஒலிம்பிக் போட்டிக்கு 40 பேர் சென்றமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு மீது சேறு பூசப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான 40 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பி க்கிற்கு சென்றதாகவும், இதில் விளையாட்டுக்குழுவிற்கு தேவையான அதிகாரி கள் மற்றும் வீரர்களே உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் இதை விட அதிகமானவர்கள் சென்ற சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாகவும்,ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் விளை யாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சேறு பூசுவதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவி த்துள்ள அமைச்சர் இவற்றிற்கு தாம் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தெளிவான அறிக்கையினை பிரதமருக்கு அனுப்பி யுள்ளதா கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு 40இற்கும் மேற்பட்டவர்கள் சென்றமை தொடர்பிலான அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது