Breaking
Sun. Dec 22nd, 2024
நாட்டில் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியினால் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி கழகத்திடமிருந்து ஒதுக்கப்பட்ட இந்த தொகையானது வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்ய பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விவசாய அமைச்சு மற்றும் முதல்நிலை கைத்தொழில் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்தே இந்த திட்டத்தினை செயற்படுத்துகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறையில் அபிவிருத்தி, வர்த்தக அபிவிருத்தி, ஏற்றுமதி மைய அபிவிருத்தியுடன் இணைந்து உயர்தர பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகின்றது.
உற்பத்தித்துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புக்களையும் இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 30,000 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 20,000 விவசாய உற்பத்தியாளர்களும் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சமூக கலாசார பொருளாதார ரீதியில் பாரம்பரிய வரலாற்றினைக் கொண்ட நாடாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கையானது அதிக வருமானம் ஈட்டும் ஒரு கைத்தொழிலாக விளங்குகின்றது.
அந்த வகையில் சிறு கைத்தொழிலாளர்களை விவசாயிகளை நவீன கைத்தொழில் பெறுமதி வலையுடன் இணைத்து அவர்களுக்கான வேலைவாய்ப்பு, மற்றும் வருமானத்தினை பெற்றுக் கொடுப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்காக விளங்குகின்றது.

By

Related Post