Breaking
Sat. Nov 23rd, 2024

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன்நிதி அமைச்சர் ரவி கருநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம் பெறுவதாகவும்,விவசாயிகள் அறுவடை செய்த நெல் கொள்வனவுக்கு போதுமான நிதி தம்மை வந்தடையவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 இலட்சம் கிலோவும்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 20 இலட்சம் கிலோ நெல் கொள்வனவுக்கு தேவயைான 200 இலட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேளை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு
பிரிவில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தொடர்பு கொண்டு தமது நெற்கொள்வனவுக்கு தேவையான நிதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.

Related Post