விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 257 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா விவசாய நிலங்களுக்கான நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி செயற் திட்டத்தை இவ்வருட வரவு செலவு திட்டத்தில் நடை முறைப்படுத்தவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
கிண்ணியா ஆயிலியடி விவசாய சம்மேளனங்களை இன்று மாலை (02) ஆயிலியடி பள்ளிவாயல் வளாகத்தில் அழைத்து இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி, பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி, முகைதீன் பாவா, கந்தளாய் பிரதேச சபை உபதவிசாளர் மதார், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபர், கமநல சேவை மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் விவசாய, கால் நடை வளர்ப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்ட கூட்டத்திலே உரையாற்றினார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
விவசாய சம்மேளனங்களுக்கான பிரச்சினைகள்,கால் நடை வளர்ப்பாளர்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிவோம்.
விவசாய அபிவிருத்தியினால் நீர்ப்பாசனத் திட்டம் ஊடாக அதிகமான வயல் நிலங்களுக்கான பல சாதகமான விளைவுகள் கிடைக்கவுள்ளது.
இதனால் நூற்றுக் கணக்கானவர்கள் நன்மையடைவார்கள் அதிக விளைச்சல் கிடைக்கப் பெறும்.
செம்பி மொட்டை, பக்கிரான் வெட்டை உட்பட பல விவசாய பிரதேசங்களுக்கான நீர்ப்பாசன திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது இதற்கான நிதி ஒதுக்கீட்டை விவசாய இராஜாங்க அமைச்சர் எமக்காக செய்துதரவுள்ளார்.
இதற்காகவே பாரிய வேலைத் திட்டமொன்றை செய்வதற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரை அழைத்திருக்கிறோம் கால் நடை வளர்ப்பாளர்கள் அண்மையில் கால் நடைகளின் இறப்பால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள்.
ஆயிரக்கணக்கான கால் நடைகள் இறந்துள்ளன இதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க இராஜாங்க அமைச்சர் முன்வருவார் என நம்புகிறேன் கால் நடைகளுக்கான ஒரு வகை தொற்று நோய் காரணமாகவே இறப்பு ஏற்பட்டுள்ளது 1757 கால் நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .
திருகோணமலையில் மாத்திரம் கால் நடைகள் இறக்கவில்லை மாறாக அநுராதபுரம், கலேவெல, மாத்தளை போன்ற இடங்களிலும் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன தகவல்களை அடிப்படையாக் கொண்டு உரிய நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்கவும் மேய்ச்சல் தரையின்மையால் இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அவ்வாறில்லை தொற்று நோய் என்பதை கண்டு பிடித்துள்ளார்கள்.
நீண்ட கால விவசாயப் பிரச்சினைகளை ஆராய்ந்து உள்ளோம் இப்போதே இராஜாங்க அமைச்சர் தீர்வினை முன்வைக்கவுள்ளார் என்றார்.