Breaking
Mon. Dec 23rd, 2024

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது

பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்
இவ்வருடம் எமது பிரதேசத்தில் மழை வீழ்ச்சி குறைவாக இருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது நாம் அனைவரும் இறைவணிடம் பிராத்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றியாஸ் , இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல் உறுப்பினர்களான அஸ்மி. அல்பதா , இணைப்பாளர் தொளபீக் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

15977731_1337189543009401_559188143994475158_n 16142211_1337189743009381_3359082700544133482_n 16195281_1337189653009390_9136227976545996369_n 16195346_1337189323009423_6809485788032621299_n

By

Related Post