ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விவசாய வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.