Breaking
Wed. Dec 25th, 2024

துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை என்.சீ வீதியில் குறித்த சதொச விற்பனை நிலையம் இன்று (01) பிராந்திய முகாமையாளர் ஜே.நிர்மலன் பெர்ணான்டோ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 408 கிளைகளில் இக் கிளையும் ஒன்றாக காணப்படுகிறது.

வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை குடியேற்றுதல், கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சதொச கிளைகள் ஊடாக நுகர்வோர்கள் சகல விதமான பொருட்களையும் குறைந்த விலையில் பெறும் நோக்குடன் குறித்த கிளை வாகன தரிப்பிட வசதிகளூடன் திறந்து வைத்து விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் இராசநாயகம், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர்களான ஈ.எல்.அனீஸ், எம்.பி.எம். முஸ்தபா உட்பட சதொச நிறுவன நடாத்துதலும் பராமரித்தலும் முகாமையாளர் ரணசிங்க , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Related Post