வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களது திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட தோட்டவெளி கிராமத்திற்கான புதிய மாதிரிக்கிராமம் உத்தியோக பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது
இன்று நடைபெற்ற ஜோசப் நகர் , ஜோசப்வாஸ் நகர் மாதிரிக்கிராமத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரதிநிதியாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார், மாந்தை பிரதேசபை தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.