Breaking
Sun. Dec 22nd, 2024

பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை.

மக்கள்தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும் நான்கு வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளதுன. அவையும் முழுமைய பெறாமல் உள்ளது.

இந்நிலையில் மண்சரிவில் பாதிக்கப்பட்டு தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் உயிரிழந்த தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு பண்டாரவளையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

By

Related Post