பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய சுமார் 40 மாணவர்கள் வீடுகள் அனைத்தும் தரை மட்டமாகியதால் செய்வதறியாது தவிக்கின்றனர்.
அதே நேரம் தனது தாய் தந்தையரை காணாமல் தவிப்பதாகவும் ஹல்துமுல்லையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் காலை தோட்ட வேலைக்கு சென்றவர்களும், பாடசாலை மாணவர்களும் மட்டுமே மண்சரிவில் இருந்து தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.