Breaking
Mon. Dec 23rd, 2024

மாதம்பை, ஊரலிய பகுதியொன்றில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வீட்டிற்கு முன்பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

 இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,நேற்றிரவு 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட போது பட்டாசு சத்தம் என்று எண்ணி அது தொடர்பில் தாம் பொருட்படுத்தவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெறும் போது வீட்டில்  மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் தந்தையும்  இருந்ததாகவும், இன்று காலை வரை சம்பவம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்றும் அவர் பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் சுற்றித்திரிந்தமை தொடர்பாக அறியக்கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

By

Related Post