Breaking
Fri. Jan 10th, 2025

அப்துல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகல்லாறு முதலாம் குறிச்சியில் வீடொன்றிலிருந்து (08) நேற்று 10 பவுண் நகைகளும், பத்தாயிரம் ரூபா ரொக்கமும் திருடப்பட்டுள்ளதான முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பிரமணியம் சுகந்தி என்பவரின் வீட்டில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
அடுக்களைப் பக்கத்தினூடாக வீட்டிற்குள் பிரவேசித்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாக சுகந்தி தெரிவித்தார்.

தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தூக்கத்திலிருந்து வழமைபோன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தவுடன் மேற்படி திருட்டு இடம்பெற்றிருப்பது தெரிய வந்தது என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post