Breaking
Tue. Mar 18th, 2025

– பா.திருஞானம் –

பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே இன்று காலை சேவையை ஆரம்பிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

acc

By

Related Post