Breaking
Mon. Dec 23rd, 2024

கடந்த 21.01.2017 ஆம் திகதி கோட்டைக்கல்லாற்றில் வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அண்ணாவியார் வீதி, எழுத்துக்காரன்துறை வீதி மற்றும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய ஆகியன பிரதி அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கண்ணன், முஸ்தபா கலீல், றிஸ்மின், பிரதி அமைச்சரின் மகளிர் ஒருங்கிணைப்பாளர் மீனா மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

16195085_1341796945881994_6011381607257002678_n 16143151_1341796845882004_1416900908234167221_n 16265426_1341796859215336_748673759614798355_n

By

Related Post