இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் வீதி விபத்துக்களினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்துள்ளனர் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற கூட்ட மொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 2,440 பேர் மரணித்துள்ளனர். 6,847 பேர் கடுமையான காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
இப்பதிவுகளை ஒப்பிட்டுப்பார்க்கையில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான தேசிய மட்டத்திலான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
-ET-