Breaking
Wed. Dec 25th, 2024

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற  ஷியா மசூதி பாரிய குண்டுவெடிப்பு சம்பம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த மசூதியில் சியாக்கள் சுமார் 150 பேர்,  தொழுகையில் ஈடுபடும்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டு மிகுந்த சத்தத்தோடு வெடித்து சிதறியதாக சம்பவ இடத்தின் அருகே உள்ளவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் சவுதி பொலிசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
காயப்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Post