Breaking
Mon. Dec 23rd, 2024

எக்காரணத்திற்கொண்டும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்ட வெட் வரி, மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வெட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் வெட் வரியை ஒரு ரூபா கூட அதிகரிக்க விடமாட்டேன் என ஜனாதிபதி தற்போது கூறியுள்ளார்.

இந்த வெட் வரி அதிகரிப்பால் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடமாட்டேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

By

Related Post