Breaking
Sun. Dec 22nd, 2024

வெனிசூலாவில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு வெனிசூலாவின் காரபோபா மாநிலத்தில் உள்ள டோகுயிட்டோ சிறைச்சலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 ஆண்கள், 8 பெண்கள் என 17 பேர் இறந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக கைதிகளை அடைத்து வைத்திருக்கும் வெனிசூலா சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் மரணமடைகின்றனர். சிறைச்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post