இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு வைபவம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். நேற்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவரது பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.
மிகவும் அமைதியான முறையில் மைத்திரிபால சிறிசேன தனது பதவியேற்பு வைபவத்தினை நடாத்தியிருந்தார். இதற்கான வைபவத்திற்காக 6000 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த 6000 ரூபாவும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான பூங்கொத்து வாங்குவதற்கும் , சுதந்திர சதுக்கத்திற்கான மின்சார கட்டணத்தை செலவு செய்வதற்குமே செலவிடப்பட்டதாக அறியமுடிகின்றது.
அத்துடன் நாட்டுமக்களும் மிகவும் அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுமாறும் புதிய ஜனாதிபதி கோரியிருந்தார்.