Breaking
Wed. Dec 25th, 2024

நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள், தனிபட்ட விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு எதிரணி ஆதரவாளர்களின் மனங்கள் புன்படும் வகையில் நடந்து கொள்ளவோ அல்லது அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதனையோ முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறு எவராவது செயற்படும் பட்சத்தில் அதற்கு தான் பொறுப்பில்லை என்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவருமான சட்டத்தரணி அல்ஹாஜ் அமீர் அலி தனது ஆதரவாளர்களை வேண்டிக்கொண்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் அமீர் அலி…….
இத்தேர்தலில் நூற்றுக்கு ஐம்பது வீதமான தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்துள்ளதாகவும், அதனால் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் மக்கள் இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதனை விரும்புகின்றமை இதனூடாக தெரிகின்றது.

ஆகவே இவ்வாறு மக்கள் தனக்கு வாக்களித்துள்ளமையினால் நிச்சயமாக நான் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் குறைகளையும் அவர்கள் வாழுக்கின்ற பிரதேசங்களில் தேவையாக இருக்கின்ற அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு எமது பிரதேசத்தில் எதிரணிக்கு கிடைத்த வாக்குக்குகளில் அன்னளவாக ஐயாயிரத்திற்கும் மேலான வாக்குகள் வெளிப்பிரதேச அபேட்சகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளமையானது மிகவும் மனவேதனைக்குறிய விடயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிரணியாக இருந்தாலும் பரவாய்யில்லை எமது பிரதேச மகனுக்கு அனைத்து வாக்குகளும் அளிக்கபட்டிருக்குமாயின் நான் சந்தோசப்பட்டிருபேன். ஆனால் பணத்துக்காக எமது மக்கள் ஐயாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை வெளிப்பிரதேச அபேட்சகர்களுக்கு வழங்கியுள்ளமையே மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக இருக்கின்றது எனக் கூறினார்

Related Post