Breaking
Sun. Mar 16th, 2025

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில்,

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன்.

கொஸ்கம சாலாவ வெடிப்புச்சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில், அரச பாதுகாப்பு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் திடீரென தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

By

Related Post