Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றி அதற்கு பதிலாக ஹொரணை பகுதியில் சிறைச்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி, தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள பிரதேசத்தில் வர்த்தக நகரமொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கியமான சிறைச்சாலைகள் பொருளியல் ரீதியாக முக்கியமான மற்றும் முக்கிய நகர்களில் அமைந்துள்ளமையால் அந்த இடங்களை பொருளாதார தேவைகளுக்காகப் பயன்படுத்தி சிறைச்சாலைகளை இடம்மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

By

Related Post