Breaking
Mon. Dec 23rd, 2024

பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் வெலே சுதா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொராயஸினவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலே சுதா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மனிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி மொராயஸினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post