Breaking
Mon. Dec 23rd, 2024

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14)  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

பிரபல போதைப் பொருள் கடத்தல் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள “வெலே சுதா” எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று(14) அறிவிக்கப்படவுள்ளது.

சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக இக்குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார்.

2008ம் அண்டு டிசம்பர் மாதம், 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக வெலே சுதா மீது சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவு ஆகிய தரப்பு சாட்சியாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.

இரு தரப்பு வாதப் பிரதிவாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணைகளின் பின்னர் இன்று வழக்குத் தொடர்பான தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post