சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார்.
2008ம் அண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாள் ஒன்றில் 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக வெலே சுதா மீது சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவு ஆகிய தரப்ப சாட்சியாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.
இரு தரப்பு வாதப் பிரதிவாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணைகளின் பின்னர் இன்று வழக்குத் தொடர்பான தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
இலங்கையில் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.