Breaking
Mon. Dec 23rd, 2024
அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கம்பல விதானகே எனப்படும் வெலே சுதா கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மிகக் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலே சுதாவுடன் கடந்த காலங்களில் இரகசியமாக பணம் பெற்றுக்கொண்ட 12 சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்ர்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வெலே சுதாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் எதிரான பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களினால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வெலே சுதாவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.

எனவே, வெலே சுதாவை போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 348ம் சிறைக் கைதி வெலே சுதாகவும், மேன்முறையீடு செய்துள்ள 331ம் கைதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 14ம் நபர் வெலே சுதா என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தம்மை தனியாக அடைக்க வேண்டாம் எனவும், இருவரை சிறைக் கூடத்தில் தம்முடன் சேர்த்து அடைக்குமாறும் வெலே சுதா சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்iயை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post