Breaking
Tue. Dec 24th, 2024

நிகவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் நேற்று (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் தலைமையில்  நடைபெற்றது.

கொபோகன பிரதேசசபைக்கு உற்ப்பட்ட வல்பொதுவெவ பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிகமான இளைஞர் யுவதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கினங்க குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளைகள் அமைக்கும் நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் வெல்பொதுவெவ பிரதேச சகோதரர் சாஜிதின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை வேட்பாளர் ரஸீஸ், பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரியாத்,அமைச்சின் குருநாகல் மாவட்ட இனைப்பாளர் அலி மேகர், வெல்பொதுவெவ பட்டதாரி இளைஞர்கள், வெல்பொதுவெவ பாடசாலையின் ஆசிரியர்கள், புத்திஜீவிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post