Breaking
Thu. Dec 26th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை குருநாகல் மாவட்டம் முழுவதும் அறிமுகம் செய்யும் வேலைத்திட்டங்கள் கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல் தடவையாக வெல்பொதுவெவ பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸை அறிமுகம் செய்யும் நிகழ்வு மாவட்டத்தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்வதற்க்கான நடவடிக்கைகளும் மேற்க் கொள்ளப்பட்டன.

வெல்பொதுவெவ யுவதிகள் அமைப்புக்கான தலைவி முனவ்வரா மற்றும் புதிதாக கட்சியில் இணைந்துகொண்ட சகோதரர் சாஜித் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூர்தி அதிகாரி நவாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டதுடன் எதிர் காலத்தில் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், அமைச்சின் குருநாகல் மாவட்ட இணைப்பாளர் அலி மேகர், குளியாப்பிடிய பிரதேசசபை வேட்பாளர் ரஸீஸ், பண்டுவஸ்நுவர அமைப்பாளர் ரியாத் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post