Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி
அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார்.
எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் விரை­வான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள் ளார். அதன்­படி விசா­ர­ணைகள் துரித கதியில் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் இலங்­கையின் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் பல பில்­லியன் ரூபா கணக்­குகள் வெளி­நாட்டு வங்­கி­களில் உள்­ளன. அவற்றை முடக்கி பணத்தை மீண்டும் இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:உங்கள் குற்­றச்­சாட்டை நாமல் ராஜ­பக் ஷ எம்.பி. மறுத்­தி­ருந்­தாரே?

பதில்: நான் அவரின் பெயரை குறிப்­பி­ட­வில்­லையே? முன்னாள் ஆட்­சி­யா­ளர்­களின் மகன் ஒருவர் என்­று­தானே கூறி­யி­ருந்தேன். யாரு­டைய பெய­ரையும் கூற­வில்லை. தற்­போது விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. விசா­ர­ணைகள் முடி­வ­டைந்­ததும் யாரின் பெயரில் கணக்­குகள் உள்­ளன என்று பார்ப்போம். டுபாயில் ஒரு வங்­கியில் 1.086 பில்­லியன் மற்றும் 1.8 பில்­லியன் டொலர்கள் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளன. டொலர்­களை எங்கு வைப்புச் செய்­தாலும் அது தொடர்­பான பதி­வுகள் அமெ­ரிக்க பெடரல் வங்­கிக்கு செல்லும். எனவே எம்மால் தக­வல்­களை பெற முடியும். ஆனால் காலம் எடுக்கும்.

இதே­வேளை, எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் விரை­வான சட்ட நட­வ­டிக்­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­படி விசா­ர­ணைகள் துரிதகதியில் முன்­னெ­டுக்­கப்­படும். இந்த விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­தியின் கீழ் இந்த பிரி­வுகள் வரு­கின்­ற­மையின் கார­ண­மாக அவர் இது தொடர்பில் உத்­த­ர­வு­களை பிறப்­பித்­துள்ளார். உண­மையில் சொல்­லப்­போனால் ஜனாதிபதி இந்த விடயங்களை தனது கையில் எடுத்துள்ளார் என்று கூற முடியும்.

கேள்வி:புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏதாவது அமைச்சரவையில் பேசப்பட்டதா?
பதில்:அது தொடர்பில் எந்த விடயமும் பேசப்படவில்லை.

By

Related Post